2026 மார்ச் 28, சனிக்கிழமை

இரு நாள் விஜயமாக இலங்கை வந்தது “சச்செட்”

Freelancer   / 2024 ஜூன் 25 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கரையோரக் காவல் படை கப்பலான சுரக்‌ஷாவுக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதிரிப் பாகங்களை இந்திய கரையோரக் காவல் படைக் கப்பலான சச்செட் அன்பளிப்பாக வழங்கியது இந்திய கரையோரக் காவல் படைக் கப்பலான சச்செட் இரு நாள்
விஜயமாக 2024 ஜூன் 19 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. 

இலங்கை கரையோரக் காவல் படை கப்பலான சுரக்‌ஷாவுக்கு 1.2 மில்லியன் அமெரிக்க  டொலர் பெறுமதியான உதிரிப் பாகங்களை அன்பளிப்பாக வழங்குவதற்காக கரையோரக் காவல் படையின் குறித்த ரோந்துக் கப்பல் இவ்விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. 

இவ்வருகையின் அங்கமாக இக்கப்பலின் கட்டளை அதிகாரி பிரதி அத்தியட்சகர் ஜெனரல் ஆர் ராஜேஷ் நம்பிராஜ் TM அவர்கள் மேற்கு கடற் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் TSK பெரேரா அவர்களையும் இலங்கை கரையோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான அவர்களையும் சந்தித்திருந்தார்.

2. இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக நடைபெற்றிருந்த நிகழ்வொன்றில் இந்திய கரையோரக் காவல் படையின் இக்கப்பலால் இலங்கை கரையோரக் காவல் படை கப்பலான சுரக்ஷாவுக்கு தேவையான உதிரிப் பாகங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ ஶ்ரீ சந்தொஷ் ஜா , இலங்கையின் பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்னே (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் TSK பெரேரா இலங்கை கரையோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான மற்றும்
இலங்கை கரையோரக் காவல் படையின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர லந்துகொண்டிருந்தனர். இக்கப்பல் 2024 ஜூன் 21 ஆம் திகதி மீண்டும் புறப்பட்டது.

3. இலங்கை கரையோரக் காவல் படையின் சுரக்‌ஷா 2017 ஒக்டோபரில் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கரையோர ரோந்துக் கப்பலாகும். 2021 ஜூனிலும் 2022 ஏப்ரலிலும் இக்கப்பலுக்கான உதிரிப்பாகங்கள் இந்தியாவால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்ததுடன் 2024 ஜனவரியில் ஹலன் சிலின்டர்களை மீள்நிரப்புவதற்கும் உதவி
வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாரிய அளவிலான உதிரிப்பாகங்களை ஒப்படைப்பது, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்தியம்புகின்றது.

4. இவ்வருட முற்பகுதியில் இந்தியக் கரையோரக் காவல் படைக் கப்பல்களான சமரத் மற்றும் அபிநவ் ஆகியவை 2024 பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் 2024 மார்ச் 05ஆம் திகதி வரை காலி மற்றும் கொழும்புக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் சாகர் கோட்பாடு ( பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும்) ஆகிய இந்திய கொள்கைகளின் அடிப்படையில் இரு நாடுகளினதும் கடற்படையினர் மற்றும் கரையோரக் காவல் படையினர் இடையிலான தோழமை மற்றும் இயங்குதிறனை வலுவாக்கும் இலக்குடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் மற்றும் இந்தியக்
கரையோரக் காவல் படைக் கப்பல்கள் இலங்கைக்கான விஜயங்களை மேற்கொள்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .