Freelancer / 2024 ஜூன் 12 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய விசாரணைக் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைத்ததாக கூறப்படும் முன்னைய தகவல்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை அரச புலனாய்வுப் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மற்றும் ஏனைய அதிகாரிகள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை ஆராயவே இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.ஜே. அல்விஸ், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த குழுவின் அறிக்கையை இவ்வருடம் செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. R
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026