2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் காதர் ஹாஜியார் அரசுடன் இணைவாரா?

Super User   / 2010 ஏப்ரல் 28 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து செல்வது தொடர்பில் இதுவரையில் தான் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின்  கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் ஹாஜியார்  சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

தான் கட்சிக்குள் மாற்றங்கள் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பிரதமர் டி.எம்.ஜயரட்ன கண்டிக்கு நேற்று விஜயம் செய்த போது நாடாளுமன்ற உறுப்பினர் காதர் ஹாஜியார் மாலை அணிவித்து வரவேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அகில இலங்கை முஸ்லிம் அமைப்பாளர் பதவியை ராஜினாமச் செய்தார்.(R.A)

  Comments - 0

 • xlntgson Wednesday, 28 April 2010 09:10 PM

  தனக்கு சிங்களவர்கள் வாக்களித்ததாகவும் ஹக்கீமுக்கு வாக்களிக்க வில்லை என்றும் கூறிக்கொண்டிருப்பதை விட கம்பளை காதர் ஆளுங்கட்சியில் சேர்ந்துவிடுவது கௌரமாக இருக்கும். கிழக்கில் எவ்வாறு பிராந்திய அரசியல் நடைபெறுகிறதோ அவ்வாறே இங்கும்! தனக்கு தானே குழி பறிக்கும் வேலை, பயந்தவர்கள் ஏன் அரசியலுக்கு வருகின்றார்கள்? எட்டு இடங்கள் ஐதேக வுக்கு கிட்டுமா?

  Reply : 0       0

  nuah Thursday, 29 April 2010 08:37 PM

  ஐ தே க வென்றிருந்தால் 8 இடங்கள் கிடைத்திருக்கும் இல்லாவிட்டால் இத்தனை கூட அதிகம் தான். இன்னும் ஓர் இடம் என்பதெல்லாம் கற்பனையே! கட்சி மிகவும் பலவீனப் பட்ட நிலையில் வேறு பெரும் தேர்தல் இப்போதைக்கு எதுவும் இல்லாத நிலையில் தலைமை மாறுவதனால் என்ன நடந்து விடும். குழி தோண்டப்பட்ட நிலையில் குழியில் யார் இறங்குவது என்பதற்கு சண்டையா அல்லது குழியை மண் போட்டு மூடுவது யார் என்று சண்டையா? அரசியல் சட்ட திருத்தத்தை பார்த்து விட்டு சண்டை போடுங்கள், பிராந்திய தலைவர்களே.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .