2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஐ.நா பிரதிநிதி இலங்கை விஜயம்;நிபுணர் குழு அமைப்பதில் தாமதம்

Super User   / 2010 மார்ச் 10 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லியான் பெஸ்கோவின் இலங்கை விஜயத்தின் பின்னர், நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லியான் பெஸ்கோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தனர்.

லியான் பெஸ்கோவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் தகவல்களை திரட்டிவருவதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். லியான் பெஸ்கோவின் இலங்கை விஜயத்திற்கான திகதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் தீர்மானிப்பார் எனவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்கக்கூடியவர்களின் பெயர் விபரங்களை பான்கீமூன் உத்தியோகப் பற்றற்ற முறையில் தயாரித்துவருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை,  எந்தவொரு நிபுணர்கள் குழுவையும் இதுவரையில் பான்கீமூன் நியமிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .