2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கருத்துரைக் குழுவின் அறிக்கை மார்ச் 8ல் வெளியீடு: உருத்திரகுமாரன்

Super User   / 2010 பெப்ரவரி 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கான கருத்துரைக் குழுவின் அறிக்கை மார்ச் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் கருத்துரைக் குழு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கூடியதாகவும், அப்போது மக்கள் அளித்த கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் ருத்திரகுமாரன் கூறியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் அடிப்படையிலாôன திருத்தப்பட்ட கருத்துரைக் குழுவின் அறிக்கை மார்ச் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .