2026 மார்ச் 19, வியாழக்கிழமை

சிதைவடைந்த சிசுவின் சடலம் மீட்பு

Freelancer   / 2024 ஜூன் 13 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவாகர்

நுவரெலியா பொரலந்த பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்றின் சடலமொன்று வியாழக்கிழமை (13)  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சிசுவின் சடலம் முழுவதும் சிதைவுண்ட நிலையில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த ஸ்தல விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவியுடனும் இப்பகுதியில் உள்ள பிரதேச தாதியர்களின் உதவியுடன் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X