2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன எங்கே?

Super User   / 2010 மார்ச் 26 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன எங்குள்ளார் என்பது தொடர்பில் இதுவரையில் எதுவும் தெரியவரவில்லை என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்காக ஒரு மில்லியன்  ரூபா சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் டெயிலிமிரர் இணையதளத்திற்கு குறிப்பிட்டார்.

தனுன திலகரட்னவை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் இன்னமும் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், தனுன திலகரட்ன நாட்டில் உள்ளார் என தாம் நம்புவதாகவும் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் கிருலப்பனை மற்றும் நாரஹன்பிட்டியில் தனுன திலகரட்ன இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தனுன திலகரட்னவிற்கு பாதுகாப்பளிப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .