2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நாளை கடும் மழை பெய்யும்

George   / 2017 ஜூன் 01 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சில பிரதேசங்களில் நாளைய தினம் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

விசேடமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில்  75 மில்லிமீற்றர் அளவிலான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல மாகாணங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இ​தேவேளை மழை பெய்யும் போது, நாட்டில்  மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அந்த நிலையம் இன்று நண்பகல் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .