2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

நாளை நோன்புப் பெருநாள்

Freelancer   / 2024 ஏப்ரல் 09 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால், நாளை (10) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்ததை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைகுழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி எம்.பி.எம் ஹிஷாம் பத்தாகி அறிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X