2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் சக்தி தொலைக்காட்சி 'மின்னல்'ரங்கா வெற்றி

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE நுவரெலியா மாவட்டத்தில்  சக்தி தொலைக்காட்சியின்  சிரேஷ்ட ஊடகவியலாளரும்,மின்னல் நிகழ்ச்சித்தயாரிப்பாளருமான  ஜெ.ஸ்ரீ ரங்கா வெற்றி பெற்றுள்ளார் என தமிழ்மிரர் இணையதளத்துக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்மிரர் இணையதளம்  ஜெ.ஸ்ரீ ரங்காவுடன் தொடர்புகொண்ட போதிலும் இதுவரை முடியவில்லை.

பிரஜைகள் முன்னணியின் பொதுச்செயலாளரான ஜெ.ஸ்ரீ ரங்கா ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஐந்து தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,முன்னள் மத்திய மாகாண அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன்,சட்டத்தரணி இராஜதுரை ஆகியோர் ஆளும் கட்சியின் சார்பில் வெற்றிபெற்றுள்ளனர்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பி.திகாம்பரம் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

மலையகத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .