2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பௌத்தமத குருமார் மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்

Super User   / 2010 ஏப்ரல் 07 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவேளை, கைதுசெய்யப்பட்ட பௌத்தமத குருமார்கள் பொலிஸாருக்கு எதிராக இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்தமத குருமார்களை பொலிஸார் பலவந்தமாக அகற்றியிருந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்தமத குருமார்கள் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த 3ஆம் திகதி  உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .