2026 மார்ச் 30, திங்கட்கிழமை

பொலிஸ் அதிகாரிக்கு இந்த நிலையா? ஐவர் கைது

Freelancer   / 2024 ஜூன் 25 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடமைகளை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 - 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், துனுவாங்கிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மிரிஹான பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையில் அவரது வீட்டிற்கு வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 

சந்தேக நபர்களை இன்று நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .