2021 ஜூன் 14, திங்கட்கிழமை

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் சிக்கினர்

George   / 2017 மே 20 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதை மாத்திரைகளை வைத்திருந்தக் குற்றச்சாட்​டில் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 ​போதை மாத்திரைகளுடன் கொழும்பு,  பொரளையில் வைத்து 18 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெய்யன்துட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே​வேளை,  5 ​போதை மாத்திரைகளுடன் கொழும்பு,  மருதானையில் வைத்து மற்றுமொரு இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் வசித்து வரும் இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .