2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மாத்தறையில் குழுக்களுக்கிடையில் மோதல்

Super User   / 2010 மார்ச் 01 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு குழுக்களுக்கிடையில் தெனியாய மாத்தறையில் சற்றுமுன் ஏற்பட்ட  ஏற்பட்ட மோதலில் குறைந்தது பத்து பேர் காயமடைந்ததுடன் அவர்களில் நான்கு பேரின் நிலை கவலைகிடமயிருப்பதாக பொலிசார் கூறினர்...
தனி நபர் ஒருவர் மீது ஒரு குழுவினர் அவதூறு கூறியதன் விளைவாக மோதல் ஏற்பட்டதாக தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து இரு குழுக்களும் வாள் மற்றும் கூறிய ஆயுதங்களால் பரஸ்பரம் தாக்கிக்கொண்டதாக பொலிசார் கூறினர். போலீஸ் கலவர படை தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக, போலிஸ் கூறியது. நான்கு பெண்கள் உட்பட காயமடைந்தோர்மாத்தற மற்றும் தெனியாய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .