Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மார்ச் 14 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கடல் தொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீன்பிடி தொழில்துறையின் வளர்ச்சிக்காக, மீன்களின் தரத்தை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்களின் வருமானத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலைமையை தணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயக்க முறைகள் கொண்ட புதிய ஆழ்கடல் மீன்பிடிக் கப்பலை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிபுணர்கள் அடங்கிய குழு திட்டமிட்டு வருகிறது. அதன் பணிகள் முடிந்ததும், புதிய மீன்பிடிக் கப்பல் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படும். மீன்பிடி உள்ளீடுகளை நிர்வகிப்பதன் மூலம் நிலையான மீன்பிடித் தொழிலைப் பேணுவதே இதன் நோக்கமாகும் என்றார். (a)
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago