2021 ஜூன் 21, திங்கட்கிழமை

விஜயகலா மகேஸ்வரன் கொழும்பிலிருந்து குண்டர்களை கொண்டுவந்துள்ளார் - டக்ளஸ் குற்றச்சாட்டு

Super User   / 2010 ஏப்ரல் 01 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

கொழும்பிலிருந்து குண்டர்களைக்கொண்டுவந்து விஜயகலா  தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயகலா மகேஸ்வரன் மீது  குற்றம் சுமத்தினார்.

தமது கட்சியினர் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பொறுக்க முடியாமல் விஜயகலா மகேஸ்வரன் குறுக்கீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்மிரர் இணையதளத்துக்கு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது சற்று முன் தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக எம்மிடம் அவர் தெரிவித்தார்.

தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாம் இந்த மோதல் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் காலையில் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரரிடம் தெரிவித்தார். 

இந்த மோதல் குறித்து மேலதிக தகவல்களைப்பெற தமிழ்மிரர் சற்று முன்னர் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் ஸ்ரீ கஜனுடன் தொடர்புகொண்டது.

இது பற்றிய தகவல்களுடன் எம்முடன் தொடர்புகொள்வதாக அவர் எம்மிடம் தெரிவித்தார்.அவருடைய தகவல்களுக்காக தமிழ்மிரர் இணையதளம் காத்துக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை,தமிழ்மிரர் இணையதளம் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளரும்,முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் மனைவியுமான விஜயகலா மகேஸ்வரனுடன் உடனடியாக தொடர்புகொண்டது

.தொலைபேசியில் எமக்குப்பதிலளித்த விஜயகலா மகேஸ்வரன் தாம் இருக்கும் இடத்தில் பிரச்சினையாயுள்ளதாகவும் பிறகு தம்முடன் கதைப்பதாகவும் தெரிவித்தார்.அச்சந்தர்ப்பத்தில் அவருடைய கையடக்கத்தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

எனினும்,தமிழ்மிரர் இணையதளம் மேலதிக தகவல்களைப்பெற முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .