2021 ஜூன் 14, திங்கட்கிழமை

வரவு - செலவுத் திட்டத்தில் சபரிமலை யாத்திரைக்கும் நிதி ஒதுக்கவும்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்த்திகை மாதம் ஆரம்பமாகவுள்ள சபரிமலை புனித யாத்திரைக்கான அரச மட்டத்திலான உதவிகள், நன்மைகள், சலுகைகளை யாத்திரிகர்களுக்கு வழங்குவதற்கு இந்து கலாசார அமைச்சு மற்றும் திணைக்களத்துக்கு தேவையான நிதியினை பெற்றுக்கொள்ள எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையினை இந்து சமய, கலாசார அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீ ஐயப்பன் சேவாபீட பீடாதிபதிகள், தேசபந்து சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

வழமையாக யாத்திரை காலம் ஆரம்பித்ததும் ஸ்ரீ ஐயப்ப யாத்திரை குழுக்கள் கோரிக்கைகள் முன்வைப்பதும் அவைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பினும் நிதியின்மை, நிதி ஒதுக்கீடு செய்யப்;படாமை காரணங்களால் அமைச்சர்களாலும் திணைக்கள அதிகாரிகளாலும் நிராகரிக்கப்பட்டு வந்ததைமையை கருத்திலெடுத்து, இம்முறையாவது இவ்விடயத்தில் நல்லதொரு தீர்வை அமைச்சரும் அதிகாரிகளும் வழங்க வேண்டுமென அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .