2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தென் மாகாண முதலமைச்சராக ஷான் விஜயலால் இன்று பதவியேற்றார்.

Super User   / 2009 ஒக்டோபர் 29 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண முதலமைச்சராக ஷான் விஜயலால் டி சில்வா இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற தென்மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு அதிக பெரும்பான்மை விருப்பு வாக்குகளினால் ஷான் விஜயலால் டி சில்வா முதலிடம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டன. கேமால் குணசேகர விக்கிரமரத்ன காணி,காணி அபிவிருத்தி,நெடுஞ்சாலைகள்,நீர்ப்பாசனம்,ஊடகம், தோட்டக்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி,கலாசாரம்,வர்த்தக -  கூட்டுறவு அபிவிருத்தி,உணவு பராமரிப்பு-விநியோகம் ஆகிய அமைச்சுக்களுக்களின் பொறுப்பு வீ.கே.இந்திகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

,தயாவங்ஸ ஆரியதிலகவுக்கு விளையாட்டு,இளைஞர் விவகாரம்,பொருளாதார- சமூக அபிவிருத்தி,சிறுவரும் அபிவிருத்தியும்,மகளிர் விவகாரம்,வீடமைப்பு நிர்மாணத்துறை,தொழில் வாய்ப்பு மற்றும் மனித வள அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயம்,விவசாய அபிவிருத்தி,மீன் பிடித்துறை மற்றும் சுற்றாடல்,விலங்கின அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களின் பொறுப்புக்கள் விஜயபாகு வீரசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .