2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கை விவகாரம்;மலேஷிய நாடாளுமன்றத்தில் விவாதம்

Super User   / 2009 நவம்பர் 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவில் வாழும் இந்திய சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதிர்க்கட்சித்தலைவர் அன்வர் இப்ராகீம்,இலங்கை அரசாங்கம் அகதிகள் விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை என கூறியிருக்கின்றார்.

இவ்வாறு மலேஷிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் பரச்சினையை உள்விவகாரமாகவெ மலேஷியாவின் வெளியுறவுக்கொள்கை கருதுகின்றது என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் செனட்டர் ஏ.கோகிலன் பிள்ளை நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

கொழும்பில் இருந்துகொண்டு முரண்படான கருத்துக்களை அன்வர் இப்ராகீம் முன்வைத்திருக்கிறார் என்றும் பிரதி அமைச்சர் கோகிலன்பிள்ளை குறிப்பிட்டார்.

ஐநா செயலாளர் நாயகம் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது மனித உரிமைகளை பாதுகாப்பதாகவும் அகதிகள் நலன்களை கவனிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது என்றும் அவர் தமது உரையில் வாத்தில் தெரிவித்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .