2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பிள்ளையான்,கருணா ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

Super User   / 2009 டிசெம்பர் 17 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை திருக்கோவில் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆதரவாளர்களுக்கும், தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நேற்று மோதல் ஏற்பட்டிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலான தெரிவித்தார்.

இந்த மோதலின்போது, 2 பேர் காயமடைந்திருப்பதுடன், வாகனமொன்று எரியூட்டப்பட்டதாகவும்  ஆசாத் மௌலான டெய்லிமிரர் இணயத்தளத்திற்கு கூறினார்.

விநாயமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளர் இனியபாரதியின் தலைமையிலானவர்களே சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆதரவாளர்களைத் தாக்கியதாகவும் ஆசாத் மௌலான குறிப்பிட்டார்.

இதேவேளை,  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆதரவாளர்களுக்கும், தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்ததை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .