2021 ஜூன் 14, திங்கட்கிழமை

திஸாநாயகம் பிணையில் விடுதலை

Super User   / 2010 ஜனவரி 11 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்திரிகையாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம்   பிணையில் செல்வதற்கான  அனுமதி இன்று நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
 
ஜெ.எஸ்.திஸாநாயகம்  50,000 ரூபா ரொக்கப் பணப் பிணையில் செல்வதற்கே இவ்வாறு நீதிமன்றத்தினால்அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும், 2007ஆம் ஆண்டு
ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்த
சஞ்சிகையொன்றின் ஊடாக இன வேறுபாட்டை தூண்டும் செய்திக் கட்டுரையை
வெளியிட்டாரென்றும்,  இந்த சஞ்சிகைக்கு நிதி சேகரித்து அதன் மூலம்
பயங்கரவாத செயல்பாட்டிற்கு உதவினாரென்றும் ஜெ.எஸ்.திஸாநாயகம் 
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், அவசரகால சட்ட
விதிகளின் கீழும் ஜெ.எஸ்.திஸாநாயகம் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றம் ஜெ.எஸ்.திஸாநாயகத்தை  குற்றவாளியாகக் கண்டு
20 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .