2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

கனேடிய தமிழர் இருவருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை

Super User   / 2010 ஜனவரி 24 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள்  அமைப்பினருக்கான ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் கனேடியத் தமிழர்கள் இருவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

30 வயதான சதஜ்கன் சரசந்திரன் என்பவருக்கு 26 வருடகால சிறைத்தண்டனையும், 55 வயதான நடராசா ஜோகராசா என்பவருக்கு 14 வருடகால சிறைத்தண்டனையும் விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விமான எதிர்ப்பு ஏவுகணை, ஏனைய ஆயுதங்களை கொள்வனவுசெய்து விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு  வழங்க முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2006ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .