2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஐ.நாவின் குற்றச்சாட்டுக்கு கருணா மறுப்பு

Super User   / 2010 பெப்ரவரி 07 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்களை படையில் சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த குற்றச்சாட்டை தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கருணாவின் நண்பர் இனியபாரதி சிறுவர்களை படையில் சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியிருந்தது.

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான பிரதிநிதி பற்றிக் கம்மார்ட்டுடான சந்திப்பிலேயே தனது மறுப்பை வெளியிட்டதாகவும் கூறினார்.

சிறுவர்களை படையில் சேர்க்கவேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை எனக் கூறிய கருணா, தாங்கள் அரசியல் நீரோட்டத்தில் சேர்ந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் இனியபாரதி போட்டியிடவிருப்பதாகவும் கருணா மேலும் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .