2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கை மீனவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழையும் இலங்கை மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியக் கடற்பரப்பினுள் இலங்கை மீனவர்கள் அடிக்கடி  நுழையும்போது, மோதல் ஏற்படுவதாகவும் மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சுட்டிக்காட்டினார்.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த  பீலிக்ஸ் பெரேரா, இலங்கை கடற்பரப்பிலிருந்து அத்துமீறி நுழையும் படகுகளை கண்காணிப்பதற்காக மீன்பிடி படகுகளில் ராடார் உபகரணம் பொருத்தப்படவிருப்பதாகவும் கூறினார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராக இந்திய அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .