2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

விபசாரத்துக்காக பெண்களை சிங்கப்பூருக்கு கடத்திய சந்தேக நபரொருவர் கைது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாருக் தாஜுதீன்)

பெண்களை விபசாரத்துக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இலங்கைக்கான சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் செய்த முறைப்பாட்டினை அடுத்து, ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.

தொலைக்காட்சி நாடகங்களுக்கான பொறியியலாளர் போல நடித்து சிங்கப்பூரில் மாதம் ஒரு இலட்சம் ரூபா சம்பளத்துக்கு நடன மாதுகளை வேலைக்கு அனுப்புவதாக கூறி இளம் பெண்களை இவர் ஏமாற்றியுள்ளார்.

இவ்வாறு ஏமாற்றப்படும் பெண்கள், சிங்கப்பூரில் உள்ள ஒரு பெண்ணுக்கு விற்கப்படுவதாகவும் அங்கு மேற்படி பெண் யுவதிகளின் விருப்பத்துக்கு மாறாக விபசாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாகவும் குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தை பகுதியைச் சேந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டவராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .