2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ்-த.தே.கூட்டமைப்பு பேச்சு தொடரும்

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

alt(றிப்தி அலி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடருமா என கேட்ட போதே மேற்கணடவாறு அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்க என தெரிவித்துள்ளதே தவிர அரசுடன் இணைந்ததாக தெரிவிக்கவில்லை.அத்துடன் தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரவுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது" என்றார்.

இரண்டு கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே சிறுபான்மையினரின் பிரச்சினைகளை தீர்வு காண முடியும் எனவும் அவர் கூறினார்.

எனவே, இரு கட்சிகளும் மிக விரைவில் சந்தித்து சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .