2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

புலிகள் இயக்க ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாரூக் தாஜுதீன்)

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர்  என்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.

குறித்த ஊடகவியலாளர் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,  அவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

காளிமுத்து சர்மிலா என்ற சந்தேக நபர் 'நெஷனல்  தமிழ் நெற்' எனும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாளராகப் பணியாற்றியதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

வடபகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதநேய நடவடிக்கைகளுக்கும் எதிராக சந்தேக நபர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டார் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர்.

இச்சந்தேக நபர் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நாடியுள்ளனர்.(DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .