2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

ஈழத் தமிழருக்கு விருது வழங்கப்பட்டமை குறித்து நியூஸிலாந்திடம் இலங்கை கவலை

Super User   / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூஸிலாந்தில் வசிக்கும் ஆறுமுகன் தேவராஜாவுக்கு பிரித்தானிய அரசியின் பதக்கம் வழங்கப்படுவதற்கு சிபாரிசு செய்தமை தொடர்பாக நியூஸிலாந்து அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளளது.

பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா இன்று நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
சுதந்திர இறைமையுள்ள 16 நாடுகளுக்கு பிரிட்டனின் இரண்டாம் எலிஸபெத் அரசியார் நாட்டின் தலைவராக விளங்குகிறார். பிரிட்டனில் நடைபெற்ற புதுவருட விருது வழங்கல் நிகழ்வில் 3 தமிழர்களுக்கும் அவர் விருது வழங்கினார். இவர்களில் ஈழத்தமிழர்கள் இருவரும் இந்திய தமிழர் ஒருவரும் அடங்குவர்.

நியூஸிலாந்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான 77 வயதான ஆறுமுகன் தேவராஜாவும் அவர்களில் ஒருவர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவரான அவர், நியூஸிலாந்திலுள்ள தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கத்தவரான ஆறுமுகன் தேவராஜாவுக்கு இவ்வாறு விருது வழங்கப்பட்டமை குறித்து அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இன்று நாடாளுமன்றில் கவலை தெரிவித்து உரையாற்றினார்.

அவரின் கருத்து பதிலளித்து உரையாற்றிய பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா, இவ்விடயம் குறித்து நியூஸிலாந்து அரசாங்கத்திடம் இலங்கை கவலை தெரிவித்துள்ளதாக கூறினார்.

'சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காகவே இவ்விருது வழங்கப்பட்டதாகவும் பிரிவிணைவாத திட்டத்தில் சம்பந்தப்பட்டமைக்காக அல்ல எனவும் நியூஸிலாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்த உத்தரவாதத்தில் நாம் திருப்தியடையவில்லை. நிலைமையை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்' என அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .