Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
மாலபே பிரதேசத்திலுள்ள தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை மூட வேண்டுமென்ற கோரிக்கையினை உயர்க்கல்வி அமைச்சு நிறைவேற்ற மறுக்குமாயின் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என சங்கத்தின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் தமது சங்கம் உயர்க்கல்வி அமைச்சருக்கு கோரிக்கைப் பத்திரம் அனுப்பும். அந்த கோரிக்கைப் பத்திரத்துக்கான அமைச்சரின் பதிலை பொறுத்தே மேல் நடவடிக்கை பற்றி நாம் யோசிப்போம் என சங்கத்தின் பேச்சாளர் டாக்டர் உபுல் குணசேகர தெரிவித்தார்.
அமைச்சு, ஸ்ரீலங்கா மருத்துவ கவுன்ஸிலை கலைக்குமாயின் நாம் முன்னறிவித்தலின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். தனியார் மருத்துவ கல்லூரியான SAITM, நாட்டின் எந்தவொரு வைத்தியசாலையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய எதிர் நடவடிக்கையை எடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் வைத்தியசாலைகளை, SAITM போன்ற தனியார் நிறுவனம் பயன்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அவர் மேலும் கூறினார்.
MaswooNmmi Wednesday, 28 September 2011 05:14 AM
இது மடத்தனமான ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் உள்நாட்டு பணம் வெளியில் செல்லும், இதனால் இலங்ககை பிச்சைக்கார நாடாக போகும்..... வைத்தியர்கள், வைத்தியத் தொழிலை மாத்திரம் செய்யவும்!!!!!
Reply : 0 0
miyad Wednesday, 28 September 2011 09:09 PM
உலகத்தில் எல்லா நாடுகளிலும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் உள்ளதென்பதை ஏன் அறிந்து கொள்ளவில்லை?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025