2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் 5 புதுமுகங்கள் போட்டி

Super User   / 2010 பெப்ரவரி 22 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

எதிர்வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்  தன்னுடன் சேர்த்து ஐந்து புதுமுகங்கள் போட்டியிடவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தமிழ்மிரர் இணையதளம் இன்று தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான  சிவநாதன் கிஷோர், சதாசிவம் கனகரட்னம் ஆகியோர் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடவிருப்பதாகவும் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும், இதன்போது, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் கே.தங்கேஸ்வரி குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .