2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கொலன்னாவையில் தாக்குதல்; 9 பேர் கைது

Super User   / 2010 ஜனவரி 15 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை  மாநகரசபை முதல்வர் சந்திரசிறி டயஸின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 9 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொலன்னாவைப் பகுதியிலுள்ள மாநகரசபை முதல்வர் சந்திரசிறி டயஸ், நகரசபை அங்கத்தவர் ஜானக நாவுலகே, முன்னாள் மாகாண அங்கத்தவர் லீஸ்லே குரூப்பு ஆராய்ச்சி ஆகியோர்களது வீடுகளின் மீதே இன்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொலன்னாவைப் பகுதியில் எதிர்க்கட்சி கூட்டணிகளின்  பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று மாலை தேர்தல் பிரசாரக் கூட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையிலேயே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதேவேளை, இந்தத் தாக்குதலின்போது, காயமடைந்திருந்த ஜானக நாவுலகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .