Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் இரண்டாவது வரவு- செலவுத்திட்டமான 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது மதிப்பீடான வரவு-செலவுத்திட்ட உரையை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் 7ஆம் திகதி ஆற்றுவதற்கு, அதனைத் தொடர்ந்து நவம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இதற்கு அமைய நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு-செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் இந்த இரண்டாவது வரவு- செலவுத்திட்டமான 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வழக்கம் போலவே பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் வழக்கத்திற்கு மாறாக ஜனாதிபதி செலவீனத்திற்கான நீதி ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ள அதேவேளை இந்த வரவு- செலவுத்திட்டத்தில் மக்களுடன் தொடர்பு பட்ட மக்கள் நலன்சார் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது .
எனவே, ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் கன்னி வரவு- செலவுத்திட்டமான 2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்திற்கும் இரண்டாவது வரவு- செலவுத்திட்டமான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்திற்கும் இடையிலான வேறுபாடுகளைப் பார்ப்போம்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் செலவீனமாக 4இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 21,610கோடியே 84,50000 ரூபாய்வினால் அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 13,725,000,000ரூபாய், பௌத்த அலுவல்கள் திணைக்களம் 3,563,000,000 ரூபாய் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 210,000,000ரூபாய், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் 270,000,000 ரூபாய். இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 300,000,000 ரூபாய் என ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சு 14,500,000,000ரூபாய், பௌத்த அலுவல்கள் திணைக்களம் 1,350,000,000 ரூபாய், முஸ்லிம் சமய பண்பாட்டு அலு வல்கள் திணைக்களம் 204,000,000ரூபாய், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்178,000,000 ரூபாய். இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்285,000,000ரூபாய் என்ற வகையில் ஒதுக்கப்ட்டுள்ளது.
இதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டை விட 2026 ஆம் ஆண்டுக்கு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சுக்கு 77 கோடியே 50 இலட்சம் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்க ளுக்காக 61,744 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி அனுரகுமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் ,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்குமாக மொத்தம் 11,6980 கோடியே 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி அநுர குமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளா தார அபிவிருத்தி அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கு 1.105.782.000000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரு அமைச்சுக்களுக்குமான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக 297,49,80,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதிக்கான செலவினமாக 1137,79,80000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 838,50,00000 ரூபாய் அதிகமாகும். அதேவேளை பிரதமர் செலவினமாக 2025 ஆம் ஆண்டுக்கு 117,0000,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான செலவீனமாக 97,50,00000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும்19,50,00,000 ரூபாய் குறைவானதாகும்
பொதுமக்களுடன் தொடர்புபட்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட் டல் அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு 30,050,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 38,600,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 855 கோடி ரூபாய் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 271,000,000,000ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 301,000,000,000ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 3000 கோடி ரூபாய் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு 496,500,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 596,000,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 99,500,000000 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்படுள்ளது ,
2025 ஆம் ஆண்டுக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 308,499,998,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 554,999,998,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 246,500,000.000 ரூபாய் அதிகமாக ஒதுக்கப்படுள்ளது.
ஜனாதிபதியின் கீழுள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு 714,177,500,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 634,782,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 79,395,500,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சு 54,106,300,000ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 58,500,000,000ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதன்மூலம் 439 கோடி 37 இலட்சம் ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற் றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்கு 473,410,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 446,000,000,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2741 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப் பாசன அமைச்சுக்கு 208,722,000,000ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 221,300,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 125 கோடி 78 இலட்சம் ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் விடமைப்பு அமைச்சு 101,282,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 103,500,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .
இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 22 கோடி 18 இலட்சம் ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 16,738,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 18,000,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 126 கோடி 20 இலட்சம் ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது 2025 ஆம் ஆண்டுக்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு 13,443,000,000ரூபாய் ஒதுக்கப்படட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 11,500,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 194 கோடி 30 இலட்சம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 11,440,000,000 ரூபாய் ஒதுக்கப்படட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 10,600,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 84 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு சுற்றாடல் சுற்றாடல் அமைச்சு 16,040,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 18,300,000,000ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 226 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு வலுசக்தி அமைச்சுக்கு 21,142,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 23,100,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 195 கோடி 80 இலட்சம் ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago