Super User / 2011 ஜூலை 14 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்பார்த்தவாறே, முடிவுக்கு வராத இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வையும் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாட்டையும் அடைவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தை கொண்டதல்லவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். இது உண்மையாயின் அரசாங்கம் இன்னும் செய்யவேண்டிய விடயங்கள் அதிகம் உள்ளன. இது உண்மையில்லை எனின் எதையும் கொடுக்க மறுக்கும் நிலைக்கு அரசாங்கம் பின்வாங்குவதாகவே கொள்ள வேண்டும். இதன் விளைவுகள் பாரதூரமாகப் போய்விடும் என்பது மறுக்க முடியாததாகும்.
நாடாளுமன்றம் சட்டத்தின் இறுதி தீர்ப்பாளராகவும், யாப்புத் திருத்தங்களின் பிறப்பிடமாகவும் இருப்பதனால் நாடாளுமன்ற தெரிவுக் குழுவே இயல்பன மார்க்கமாக இருக்கமுடியும் என அரசாங்கம் கூறுவதில் உண்மையுள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழு, தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை ஒவ்வொன்றாக கவனிக்க போகின்றதா அல்லது சூனியவெளியில், சட்டத்திருத்தங்களையும் யாப்புத் திருத்தங்களையும் வரையப் போகின்;றதா என்பதுவே முடியாத கேள்வியாகும்.
இந்த கேள்விக்கு பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டதும் அரசாங்கம் தனது ஆலோசனைகளை அதனிடம் சமர்ப்பிக்கும் என அவர் கூறியுள்ளார். இந்த ஆலோசனைகள் அரசாங்கத்திலுள்ளோரின் பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்படுவதாக இருக்குமா அல்லது பெரும்பான்மையினால் தீர்மானிக்கப்பட்டதாக இருக்குமா என்னும் கேள்வி எழுகின்றது.
இந்தக் கட்டத்தில்கூட, அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் (APRC) திஸ்ஸவிதாரண அறிக்கையை அரசாங்கம் தனதாக வரித்துக் கொள்ள முடியும். APRC இன் அமர்வுகளை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பகிஷ்கரித்திருந்தாலும் அதற்கு இந்த ஆலோசனைகள் தொடர்பில் தயக்கமோ அல்லது பயமோ இருப்பதாக தெரியவில்லை. ஒற்றையாட்சி முறையோடு இந்த ஆலோசனைகள் நின்றுவிடுவதால் சிங்கள தேசியவாதிகளின் அடிப்படையான பயத்தையும் தீர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இதைவிட வேறென்ன தேவை!.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம்கள், ஜாதிக ஹெல உறுமய ஆகியன உட்பட ஏனைய பங்குதாரர்களும், வேறு வரைவுகளை கொண்டிருக்கலாம். வேறு சிலர் புதிய கருத்துக்களை கொண்டிருக்கலாம். நாடாளுமன்ற தெரிவுக் குழு அரசாங்கத்தின் ஆலோசனைகளை ஆராய்வது போல இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான ஒரு குழு நல்ல பயனைத் தருவதற்கு காலவரையறை ஒன்று அவசியமானதாகும்.
சண்டைக்கு பிந்திய நிலைமையில் உருவாகிவரும் விசைகள், முன்பு கொடுக்க முன்வந்ததை மறுப்பதற்கு காரணமாகிவிடக் கூடாது. புதிய கருத்துக்களும், குறிப்பான விடயங்களுக்காக தீர்வுகளும் ஒவ்வொரு கட்டத்திலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.
முப்பது வருட யுத்தத்திற்கும் அதன் பின்விளைவுகளுக்கும் ஓரிரு நாட்களின் தீர்வு காணமுடியாது. சில பிரச்சினைகள் தமது பாட்டிலேயே மறைந்துவிடும். முன்னைய காலத்தில் நடந்தது போலவே ஏனைய பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கும். இவற்றின் முன்னுரிமை, நிலைத்திருக்கக் கூடிய காலம் என்பன பற்றி குழம்பிக் கொள்ளக் கூடாது.
அதிகார பகிர்வு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பினுடனான பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், அரசாங்கக் குழுவின் தலைவராக, இறுக்கமான போக்குள்ளவர் என கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவை ஜனாதிபதி மஹிந்த நியமத்திருந்தார். பின்னர் தாரண்மைவாதியான ரஜீவ விஜயசிங்க இவரிடத்திற்கு நியமிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சியான ஐ.தே.க. எப்போதும் போலவே தமிழர்களும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளும் எந்த தீர்வையும் தான் ஆதரிப்பதாக கூறியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வராத ஒரு காலத்தில் ஐ.தே.க அதிகார பரவலாக்கலை மறுத்துச் செயற்பட்டது. சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளை பிரித்தெடுத்து எதிர்ப்பதற்கு பதிலாக சட்டமூலம் முழுவதையும் ஐ.தே.க. நாடாளுமன்றத்தில் எரித்தனர்.
ஜாதிக ஹெல உறுமய ஆளும் கூட்டணியில் உள்ளது. அது அரசியல் தீர்வு ஒன்று தேவை எனக் கூறினாலும் அதிகாரப் பகிர்வு தேவையில்லை என கருதுகின்றது. எல்.ரீ.ரீ.ஈ.யின் வருகைக்கு முன் இலங்கை தமிழர்களுக்கு குறைபாடுகள் இருக்கவில்லை என அது தொடர்ந்து கூறி வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்.ரி.ரி.ஈ.யின் தரகராக தொடர்ந்தும் செயற்படுவதாக இந்தக் கட்சி கூறிவருகின்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ் பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதியாக தான் ஏற்கவில்லை என அரசாங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போதிலும் ஜாதிக ஹெல உறுமய இதை நம்புவதாக இல்லை. வடக்கு தமிழர்கள், தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக இருக்கின்றனர் என்பதும் உண்மை. நிதர்சனமான இந்த விடயத்தை ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றது.
ஜே.வி.பி. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென விரும்புகிறது. கடந்த சில மாதங்களாக இக்கட்சியின் தலைவர்கள் போரினால் சிதைக்கப்பட்ட தமிழர்கள் வாழும் வடபகுதிக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். ஆயினும் இது நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்ற விரும்பவில்லை. முன்னைய அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிலும் இக்கட்சி பங்குப்பற்றவில்லை. எந்தவொரு தீர்வையும் முன்வைக்காத ஜே.வி.பி., வரக் கூடிய எந்த தீர்விலிருந்தும் கோழைத்தனமாக விலகியிருக்க விரும்புகிறது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுமாயின் த.தே.கூட்டமைப்பு அதைப் பகிஷ்கரிக்கும் என கூறப்படுகிறது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் பங்குபற்றுமாறு த.தே.கூட்டமைப்பை அரசாங்கம் அழைக்கவில்லை. சிங்கள பெரும்பான்மையினரின் ஒருமித்த கருத்து அடையப்பட்டப்பின் இதன் அடிப்படையில் த.தே.கூட்டமைப்புடன் பேசலாம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.
யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை, ஒரு பின்னோக்கிய நகர்வாக அல்லது மறுதலிப்பதாக கருதாமல் அதை ஒரு வாய்ப்பாக கருதவேண்டும். ஏகப் பிரதிநிதி என்ற கருத்தில் ஊன்றி நிற்பதனால் த.தே.கூட்டமைப்பு தனது நியாயங்களை வலுப்படுத்த முடியாது. இந்த விடயத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் பயத்தை சிங்கள அரசியல் சமுதாயம் மட்டுமன்றி வேறு பலரும் கொண்டுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தனக்கு வடக்கில் கிடைத்துள்ள தேர்தல் வெற்றிகளுக்கும் அப்பால் சென்று இந்த பயங்கள் அர்த்தமற்றவை என நிரூபிக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் சமுதாயத்தினுள் உள்ள அரசியல் பெரும்பான்மை ஆதரவுக்கும் பெரும்பான்மை சமுதாயத்தினரின் உணர்வுகளுக்கும் இடையில்தான் உண்மை உள்ளது. இவை இரண்டுக்குமிடையில் சரியான சமநிலை எய்தப்பட வேண்டும்.
தேர்தலின்பின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மைக்காலம்வரை முஸ்லிம்களின் கோரிக்கைகள் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசிக்கொள்ளும் எனக் கூறிவந்தது. இப்போது அவர்கள் அரசாங்கம் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையில் தம்மை மூன்றாம் தரப்பாக சேர்க்க வேண்டுமென கோருகின்றனர்.
மலைநாட்டு தமிழர்களின் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளையும் வித்தியாசமானவை என ஏற்றுக்கொள்வதற்தகு தமிழ் தேசிய கூட்டமைப் தயங்கவிடக்கூடாது. எவ்வாறாயினும் இறுதியாக இனத்துவ மற்றும் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு ஒட்டு மொத்தமான தீர்வை இலங்கைக்காண வேண்டியிருக்கும். இதற்கு தயாராக இருக்கும் வகையில் அணுகுமுறை மாற்றம், சட்டத்திருத்தங்கள், யாப்பு திருத்தங்கள் என்பவற்றை இப்போதே தேவைக்கேற் யாப்பு செய்து கொள்ள வேண்டும். திஸ்ஸ விதாரண அறிக்கை இவ்வாறான பிரச்சினைகள் பற்றி ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபாரிசுகளுக்கு ஐ.தே.க, ஜே.வி.பி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன பங்குதாரர்களாக கூட்டமைப்பு என்பன பங்குதாரர்களாக இல்லாத போதிலும், இந்த சிபாரிசுகள் பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படை ஆவணமாக்கப்படுமாயின் இந்த கட்சிகள் தமது அபிப்பிராயத்தை நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கூறவேண்டியிருக்கும். அரசாங்கமும் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள அல்லது ஏற்படாத முன்னேற்றங்கள் பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவான அறிவிக்க முடியும்.
அரசாங்கத்திற்கு யாப்பு திருத்தம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு அவசியமான மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளது. வாக்கெடுப்பு தேவைப்படும் அரசியல் பொதியொன்றில் அரசாங்கம் சிறுமாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். அல்லது ஏற்கக் கூடியதொரு தீர்வு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க செய்யவும் ஒப்பங்கோடலில் மக்களின் ஆதரவை பெறவும் அரசாங்கம் அரசியலில் சிறு மாற்றங்களை செய்ய வேண்டும். இதற்கு புதிய சிந்தனைகளும் முன்னெடுப்புகளும் அவசியமானவை. இதனால் வரும்நன்மை நாட்டுக்கும் மக்களுக்கும், தொடர்புப்பட்ட அரசியல் சமுதாயத்திற்கும், தலைவர்களுக்கும் பெறுமதி வாய்ந்ததாக அமையும். தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026