Janu / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில், அதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் புதன்கிழமை (18) வரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை முன்னெடுக்க கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக 48 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவை வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ஆகியோர் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
எதிர் தரப்பான பிரதிவாதிகள் சார்பாக எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகவில்லை.
குறித்த வழக்கு விசாரணைக்காக சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, நீதிமன்றம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago