2026 மார்ச் 28, சனிக்கிழமை

அசுத்தமடைந்தார் காசியப்ப மன்னன் (படங்கள்)

Lenin Raj   / 2026 மார்ச் 26 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியாவிலுள்ள பிரபல சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, சீகிரியாவின் புனித பூமியில் கொட்டிய குற்றச்சாட்டில் மூவரைச் சீகிரியா வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சீகிரியா வனவிலங்கு அலுவலகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சீகிரியா வனவிலங்குப் பிராந்தியப் பாதுகாப்பு அதிகாரி எஸ்.எஸ். மலிந்த அவர்களின் வழிகாட்டலில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் திணைக்கள ஊழியர்கள் உட்படச் சுமார் 50 பேர் இந்த விசேட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விடுதியிலிருந்து வெளியேற்றப்படும் அனைத்துக் கழிவுகளும் அபய பூமியில் கொட்டப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவுகளைக் காட்டு யானைகள் மற்றும் ஏனைய வனவிலங்குகள் உணவாக உட்கொண்டுள்ளமையும் அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .