Freelancer / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலர்களான மாணவனும் மாணவியும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர் எனவும் இதன்போது அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர் மாணவரை தாக்கிவிட்டு அவர் கண்முன்னே மாணவியை துஸ்பிரயோகம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட காதலர்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், இந்த சம்பம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கோட்டூர்புரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025