2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அத்துருகிரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரியப் பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் ​சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய பெண்ணொருவர், இன்று (07) கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அழகுக்கலை நிலையமொன்றில் இடம்பெற்ற இத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், ரணில் பண்டார என்பவர் கொல்லப்பட்டார்.

இக்கொலைக்கு உ​டந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே, பன்னிப்பிட்டியப் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்குறிப்பிட்ட பெண், மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 29 மற்றும் 24 வயதுடைய இருவர், மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவினரால் கடந்த 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கொலைச் சம்வம் தொடர்பான மேலதிக விசா​ரணைகளை அத்துருகிரியப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X