Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜனவரி 18 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலையை 20 ரூபாயாக, குறைக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சின் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.
அதிர்ஷ்ட இலாபச்சீட்டொன்றின் விலையை நிதியமைச்சு, 30 ரூபாயாக அதிகரித்தமையைக் கண்டித்து, அதிர்ஷ்ட இலாபச்சீட்டு முகவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் (16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், தேசிய லொத்தர் சபையின் தலைவி ஷியாமிளா பெரேராவுக்கும், அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில், நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையிலேயே, பழைய விலைக்கே அதிர்ஷ்ட இலாபச்சீட்டினை விற்பனை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சின் கீழியங்கும் உரிய பிரிவுக்கு பணித்துள்ளார்.
அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை, 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை, 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டமையால், அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விற்பனை 40 சதவீதத்தினால் குறைந்துள்ளது என்று, அகில இலங்கை அதிரஷ்ட இலாபச்சீட்டு விற்பனைப் பிரதிநிதிகளின் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அதிர்ஷ்ட இலாபச்சீட்டினை பழைய விலைக்கே விற்பனை செய்யுமாறு, நிதியமைச்சின் உரிய பிரிவுக்கு, ஜனாதிபதி பணித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உறுதிப்படுத்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago