Simrith / 2024 ஒக்டோபர் 31 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயக முன்னணியால் (NDF) முன்மொழியப்பட்ட மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் தங்கள் அனுமதியின்றி தங்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக நான்கு வேட்பாளர்களும் தெனியாய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தங்களின் சம்மதம் இன்றி தமக்குத் தெரியாமல் வேட்புமனுப் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், தபால் திணைக்களம் வழங்கிய வாக்காளர் அட்டையுடன் கூடிய வேட்பாளர் பட்டியலைப் பெற்ற பின்னரே இது குறித்து தங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
தரங்க தேசப்பிரிய, சமல் லசந்த, நிஷால் பிரினயந்த மற்றும் பிரசாத் உதய ஆகியோரே மாத்தறை மாவட்டத்தில் கார் சின்னத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் பெயர் உள்ளடங்கியிருந்ததாக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள தேர்தல் காரியாலயத்திற்கு இந்த முறைப்பாட்டை பொலிஸார் அனுப்பி வைத்துள்ளதுடன், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மாத்தறை தேர்தல் அதிகாரியிடம் முறைப்பாடு செய்யுமாறு நான்கு வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
2 hours ago