Niroshini / 2021 மே 18 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நடத்தப்படும் அனைத்துத் தேர்தல் முறைமைகளிலும் திருத்தங்களை மேற்கொள்ள, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் என அனைத்து வகையான தேர்தல் முறைமைகளையும் திருத்தியமைக்கவுள்ளதாக, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் முறைமை, வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய முறைமை மற்றும் அதற்கான சட்ட வரையறைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளைப் பெற்றுக்கொள்ள ஒரு மாதகால அவகாசம் வழங்கவும், அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய தேர்தல் மற்றும் வாக்கெடுப்பு முறைமைகளில் காணப்படும் குறைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு, அதன் தலைவரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன தலைமையில், நேற்றைய தினம் (17) முதன்முறையாகக் கூடிய போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
3 hours ago