2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அன்புக்குரியவர்களைத் தேடி 15 பெண்கள் விண்ணப்பம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்கள் 15 பேர், தமது அன்புக்குரியவர்களைப் பற்றி விவரம் அறிய தகவலறியும் உரிமைப்பாதையில் சென்றுள்ளனர். தகவலறியும் உரிமைச் சட்டம், இலங்கையில் இம்மாதம் 3ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.

இந்நிலையிலேயே, மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்கள் குழுவொன்று இவ்வாறு விண்ணப்பித்துள்ளது.  

அரசாங்க அலுவலர்களுக்கு முறைப்படுதல் மற்றும் பல ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் வழங்குதல் என பல வருடங்களைப் போக்கிவிட்ட மட்டக்களப்புப் பெண்கள், காணாமல்போன தமது உறவினர்களைப் பற்றித் தகவலறிய, ஒரு புதிய முறையை பயன்படுத்தியுள்ளனர். 

தகவலறியும் உரிமைச் சட்டத்தினை 2016இல் நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. இதன் மூலம், கூடுதல் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறுதல் ஆகியவற்றுக்கான பிரசாரம் செய்வோருக்கு நம்பிக்கை உருவாகியது. 

இந்தச் சட்டம், பெப்ரவரி 3இல் அமுலுக்கு வந்தது. சட்டம் அமுலுக்கு வந்த அன்றே, 15 பெண்கள் நடந்து சென்று மாவட்ட செயலகம், மாவட்ட, மாகாண பொலிஸ் தலைமையகம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றிடம், காணாமல்போன தமது குடும்ப உறுப்பினர்கள் பற்றி விவரம் கேட்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். அவர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் நகரம் முழுக்க நடந்தனர். அவர்கள், உணவையும் விடுத்து தோல்வி மனப்பான்மையையும் விடுத்து, கருமமே கண்ணாயினர்.

“நீண்ட காலம் நடந்த யுத்தத்தின் மிகவும் கொடூரமான பக்கத்தை, கிழக்கு மாகாணம் கண்டது. இதன்போது பல்லாயியிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இன்னும் ஆயிரக்கணக்காணோர் காணாமல் போயினர். இதற்கு அரச படைகளும் சில சமயம் தமிழீழ விடுதலைப்புலிகளும் காரணமென கூறப்பட்டது. வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்படுதல், வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் பிரதான விசனமாக உள்ளது. 

தமது உறவுகளைப் பற்றி சில தகவல் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் அங்கும் இங்குமாக அலையும் பெண்களுக்கு, வௌ்ளிக்கிழமை எடுத்த முயற்சி மேலும் ஒரு முயற்சி மட்டுமே, இது அவரகளுக்கு நம்பிக்கை ஊட்டவில்லை. 

“காலை 8.00 மணிக்கு நாம் புறப்பட்டு மாலை 5.45 வரை அலுவலகங்களுக்குப் போனோம்” என, பி.தீபா என்பவர் தெரிவித்தார்.

 “இதுவும் எமது முன்னைய முயற்சிகளைப் போலவே இருந்தது. உருப்படியான பதில் கிடைக்கவில்லை” என்ற அவர், 2009 இலிருந்து தனது கணவனைத் தேடித் திரிவதாகக் கூறினார். 

தனது கணவனைத் தேடும் இன்னொரு பெண்ணான அமலாபதி, தகவலறியும் உரிமைச் சட்டம் பற்றித் தாம் அலுவலர்களுக்கு விளக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டன என்றார். 

அதிகமான அரசாங்க அதிகாரிகளிடம் இப்படியொரு சட்டம் இருப்பதே தெரியாத போது, அவர்கள் எவ்வாறு எமது விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பர் என பெண்கள் கேட்டனர். 

அரசாங்க ஊழியரின் அலட்சியப் போக்கு, தங்களை விரக்தியடையச் செய்கின்றது என்று, இன்னும் சில பெண்கள் தெரிவித்தனர். 

“சில உத்தியோகத்தர்கள் மரியாதையாக எம்மை நடத்தினர். ஆனால் பலர் அலட்சியமாக இருந்தனர்” என, இந்தப் பெண்கள் கூறினர். 

“எட்டு வருடம் பொறுத்த நீங்கள், இன்னும் சில நாட்கள் பொறுக்க முடியாதா என ஓர் அதிகாரி கேட்டார். எமது அன்புக்குரியவர்கள் பற்றி எதுவும் அறிய முடியாதுள்ள நாம் படும்பாட்டை அவர்கள் உணரவில்லை” என அமலநாயகி என்பவர் கூறினார். 

“ எமது உறவுகளை உடனே கொண்டு வாருங்கள் என நாம் கேட்கவில்லை எமக்கு சில தகவல் தாருங்கள் என்றே கேட்கிறோம்” என்றனர். “இந்தச் சட்டம், நாட்டுக்குப் புதியது என்பதனால், அவர்கள் 100 சதவீதம் சரியாக செயற்படமாட்டார்கள்” என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூறினார். 

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது, தொடக்கத்தில் சில பிரச்சினைகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

(நன்றி-தி இந்து)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X