Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
269 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது.
காலை 9 மணி முதல் அரச ஊழியர்கள் வாக்களித்து வந்தனர்.
இந்த தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 1192 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
தபால் மூல வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago