2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அமைச்சரவை அதிகரிப்புக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

Thipaan   / 2016 மார்ச் 16 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவையை அதிகரிப்பதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கான காரணத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு, உயர்நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

அமைச்சரவைக்குள், கூடுதலான எண்ணிக்கையானோரை நியமிப்பதன் ஊடாக, தன்னுடைய அடிப்படை உரிமையை ஜனாதிபதி மீறுகின்றார் என்றும், இன்னுமின்னும் அமைச்சர்களை நியமிக்கவேண்டாமென்று ஜனாதிபதிக்குக் கட்டளையிடுமாறும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஒருவரினாலேயே இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, அனில் குணரத்ன மற்றும் புவனே அலுவிகார ஆகிய இரண்டு நீதியரசர்கள் அடங்கிய குழு முன்னிலையில் நேற்றுப் புதன்கிழமை பரிசீலிக்கப்பட்டபோதே மேற்கண்டவாறு திகதி குறிப்பிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .