2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில நாட்களில் நடக்கவிருந்த அமைச்சரவை மாற்றத்தை ஒத்திவைக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக, தகவலறிந்த அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருடன், கடந்த 3ஆம் திகதியன்று கலந்துரையாடலொன்று நடத்திய பின்னர், இதைப் பல மாதங்களுக்கு ஒத்திவைக்க, ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக, அத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள சில அமைச்சர்களை, மாற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாக, முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X