2025 ஜூலை 09, புதன்கிழமை

அரசாங்கம் எதுவென ஆராய வேண்டும்

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், “அரசியல் சூழ்ச்சி”யின் ஒருபகுதியே முறியடிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, சட்டபூர்வமான அரசாங்கம் எதுவென, இன்று (14) ஆராயப்பட வேண்டுமெனவும் கோரினார்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள சபாநாயகர் இல்லத்தில், சபாநாயகர் கரு ஜயசூரியவை நேற்று (13) இரவு சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த 26 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை, நாட்டில் அரசியல் சூழ்ச்சியொன்று இடம்பெற்றது. இருவர் இணைந்து, அரசமைக்க முட்பட்டனர். அந்த அரசாங்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை, நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளாமல், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

“எம்.பிக்களை அச்சுறுத்தி விலைக்கு வாங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மைத்திரி - மஹிந்தவால், பெரும்பான்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே, சூழ்ச்சியின் அடுத்த கட்டமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது” என்றார்.

இவ்வாறான நிலையிலேயே உயர்நீதிமன்றம், “சூழ்ச்சியை முறியடிக்கும் வகையிலான தீர்ப்பை” வழங்கியுள்ளது எனத் தெரிவித்த அவர், அதன் மூலமாக, “சூழ்ச்சி”யின் ஒரு பகுதி மாத்திரமே முறியடிக்கப்பட்டுள்ளது எனவும்,  அடுத்த பகுதியைத் தோற்கடிக்கும் முயற்சிகளை, நாடாளுமன்றத்திலேயே முன்னெடுக்க முடியும் எனவும், அதனாலேயே சபாநாயகரைச் சந்தித்து, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

அதேபோல், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசாங்கம் எதுவென அறிந்துகொண்ட பின்பே, அடுத்தகட்ட  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .