R.Maheshwary / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று அரசாங்கம் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு மத்தியில் மக்களுக்கு உரிய தரமான பொருள்களை வழங்காமல், திட்டமிட்டு மக்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடுகின்றது என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “அரசாங்கத்துடன் இருக்கும் வர்த்தகர்கள், தமது தேவைக்கேற்ப இறக்குமதி வரிகளைக் குறைப்பதாகத் தெரிவித்ததோடு, சீனி அநியாயத்துக்கு மத்தியில் தேங்காய் எண்ணெய் பிரச்சினை வந்துள்ளது” என்றார்.
“தேங்காய் எண்ணெய்க்கான வரியையும் குறைத்துள்ளதால், நாட்டுக்குள் எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போது புற்றுநோயை உருவாக்கக் கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய், மக்கள் பாவனைக்காக விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், அந்த எண்ணெயை, துறைமுகத்திலிருந்து நாட்டுக்குள் விடுவிக்கப்படவில்லை என அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகளும் அமைச்சர்களும் கூறுகின்றனர்.
“ஆனால், இந்தத் தேங்காய் எண்ணெயை விற்ற கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே, அரசாங்கம் எவ்வளவு தான் இந்தப் புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை நாட்டுக்குள் விநியோகிக்கவில்லை என்று கூறினாலும், நேற்றும் குறித்த எண்ணெய் நிரப்பப்பட்ட 2 பவுசர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே, நாட்டு மக்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன” என்றார்.
“இன்னும் 2 வாரங்களில் வரவுள்ள தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்கு, மக்கள் அதிகம் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தும் நிலையில், விஷம் கலந்த எண்ணெயை அரசாங்கம் மக்களுக்கு பயன்படுத்தம் நிலையை உருவாக்கி, அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதுடன், அரசாங்கம் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.
18 minute ago
32 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
42 minute ago
47 minute ago