2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அர்ஜுனின் செலவுகள்: ஆராயுமாறு கடிதம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வச் செலவுகள் தொடர்பிலான விசா​ரணையொன்றை மேற்கொள்வது அவசியம் எனத் தெரிவித்து, ஊழல் எதிர்ப்பு முன்னணியினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனால், ஜனாதிபதியின் அனுமதியின்றி 66,280,616 ரூபாய் பணம், செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ​மேற்படி முன்னணியினால் இன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X