2025 ஜூலை 09, புதன்கிழமை

அறநெறி ஆசிரியர்களுக்கு , 7,500 ரூபாய் கொடுப்பனவு

Janu   / 2025 ஜூலை 08 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறநெறிப் பாடசாலை கல்வி ஊடாக சமூகத்தின் ஆன்மீக அபிவிருத்திக்கு சிறந்த உந்துசக்தி கிடைக்கிறது.

எனவே, எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்குத் அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக அறநெறி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு வழங்குதல் மிகவும் பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2026 ஆண்டு தொடக்கம் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களுக்குரிய பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் ஒரு ஆண்டு கால தொடர்ச்சியான சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு அடங்கலான கொடுப்பனவாக ரூபா 7,500  தொகையை ஆண்டுக்கு ஒரு தடவை செலுத்துவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .