2025 ஜூலை 09, புதன்கிழமை

அ​மெரிக்காவின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய ​கோரிக்கை

Editorial   / 2020 பெப்ரவரி 15 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ தளபதி சவேந்திர சில்வா​வின் குடும்பத்தார் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளமைக்கு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம்,  அந்த தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.

குறிப்பாக அவர் இராணு தளபதியாக பதவியேற்று 6 மாதங்களின் பின்பே இவ்வறானதொரு தீர்மானத்தை அமெரிக்கா அறிவித்துள்ளதெனவும்,  மேற்படி தீர்மானத்துக்கு சாதனமானவை என குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களில் எந்தவித உண்மைகளும் இல்லையெனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், சவேந்திர சில்வா மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்பதோடு, தற்போதுள்ள இராணு அதிகாரிகளின் சிரேஷ்ட தரத்தை கருத்தில் கொண்டே அவருக்கு இராணுவ தளபதி என்ற பதவிநிலை வழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .