2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆசிரியர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்ல - இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றின் மீது, நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த அமைச்சுக்கு முன்னால், ஆசிரியர்கள், அதிபர்களால், எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 22 வருடங்களாகத் தாம் எதிர்நோக்கிவரும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குதல், 30 மாதங்களாக நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்குதல் உள்ளிம்ம கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்தே, இந்த ஆ​ர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பத்தரமுல்ல - பெலவத்த பிரதேசத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .